| புதிய அ

  Home
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  Sign Guestbook
  View Guestbook
  Teachers' Day
  News Archive
  Messages
  About Us
  Contact Us
  OSA
  Prize Day 2008
  FAQ
 
 
புதிய அதிபர் திரு.மாகாலிங்கம் ஞானசம்பந்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!!

[10 July 2017 08:31 GMT]
கல்லூரியின் புதிய அதிபராக இன்று பதவியேற்க்கும் திரு.மாகாலிங்கம் ஞானசம்பந்தன் அவர்களை கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம் சார்பாக வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தி புதிய உத்வேகத்துடன் எமது கல்லூரியை முகாமைத்துவம் செய்வீர்கள் என்று நம்புகின்றோம். உங்கள் முயற்ச்சிக்கு கல்லூரி சமூகம் என்றும் தனது ஒத்துழைப்பினை வழங்கும்.

தங்கள் சேவைக்காலம் கல்லூரியின் பொற்க்காலமாய் மிளிரவேண்டும் என வாழ்த்துகின்றோம்!    

கல்லூரியின் புதிய அதிபராக திரு.மாகாலிங்கம் ஞானசம்பந்தன் நியமனம்!

[08 July 2017 08:28 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக திரு.மாகாலிங்கம் ஞானசம்பந்தன் அவர்கள் நியமனம் செய்யப்படுள்ளார். இவர் தனது கடைமைகளை 10-07- 2007 அன்று போறுப்பேற்றுக்கொள்ளுவார்.    

சிறப்புற நடைபெற்ற உயிரியல் ஆய்வுகூட திறப்புவிழா!

[06 July 2017 12:24 GMT]
1993ம் ஆண்டு மாணவர்களினால் புனரமைப்பு செய்யப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட கல்லூரியின் உயிரியல் ஆய்வுகூடம் நேற்று காலை 11:00 மணிக்கு வைபவரீதியாக எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்க்கு தலைமை தாங்கிய கல்லூரி அதிபர் திரு.சோ.லோகேஸ்வரன் அவர்கள் தமது உரையில் கல்லூரிக்கு தாமக முன்வந்து உதவி செய்த 1993ம் ஆண்டு மாணவர்களின் உதவியை பாரட்டியதோடு தற்போது கல்வி கற்க்கும் மாணவர்கள் இந்த ஆய்வுகூடத்தை பிரயோசனப்படுத்தி அடுத்துவரும் உயர்தர பரீட்சைகளில் ஓர்மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என தெரிவித்தார்.     Detail>>>

கொக்குவில் இந்துக் கல்லூரி உயிரியல் ஆய்வுகூட திறப்புவிழா - நேரடி ஒளிபரப்பு

[04 July 2017 08:34 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரி உயிரியல் ஆய்வுகூட திறப்புவிழா - நேரடி ஒளிபரப்பு

இலங்கை நேரம் காலை 10:30 மணி தொடக்கம் 12:30 மணி வரை (05-07- 2017)     Detail>>>

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சாம்பியன் ஆகியது கொக்குவில் இந்து!!

[03 July 2017 11:16 GMT]
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினரால் நடாத்தப்பட்ட இளையோருக்கான சுற்றுப்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி 17வயதுக்குட்பட்டோர் ஆண்கள் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

20வயதுக்குட்பட்டோர் பெண்கள் ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இறுதிச் சுற்றுவரை முன்னேறி இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டது.

இம் மாணவவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அவர்களுக்கு உறுதுணையாய் நிற்க்கும் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.     Detail>>>

வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் சாதனைகள் - கராட்டி!

[01 July 2017 08:58 GMT]
வட மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் மிக சிறப்புற தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் கராட்டி தற்பாதுகாப்பு கலை போட்டியில் 20 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் செல்வன் ரஜீபன் 3ம் இடத்தை தட்டிச்சென்றார்.

அவருக்கு எமது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.     Detail>>>

1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்து வசம் முதலாம், இரண்டாம் இடங்கள்!

[26 June 2017 09:12 GMT]
யாழ்ப்பாண மாவட்ட மெய்வன்மைச் சங்கத்தினால் நடாத்தப்படும் இளநிலைப் பிரிவினருக்கான தடகள தொடரில் 18 வயது ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் செல்வன் திசான் முதலிடத்தையும் செல்வன் றினுசன் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற்றது. 4 நிமிடம் 52 செக்கன்கள் 04 மில்லி செக்கன்களில் ஓடி முடித்து
செல்வன் திசான் முதலிடத்தையும் , செல்வன் றினுசன் 4 நிமிடங்கள் 55 செக்கன்கள் 04 மில்லி செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தையும் , இளவாளை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வன் தசிந்தன் 5 நிமிடங்கள் 08 செக்கன்கள் 09 மில்லி செக்கன்களில் ஓடிமுடித்து மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.     Detail>>>

வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் சாதனைகள் - மேசைப்பந்து,சதுரங்கம்!

[22 June 2017 09:20 GMT]
வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் மிக சிறப்புற தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை நடந்த போட்டிகளில் மேசைப்பந்து விளையாட்டிலும் மாகாண சம்பியன் பட்டத்தினை தமதாக்கினர்.

17, 20 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் மேசைப்பந்து அணிகள் சம்பியன் கிண்ணத்தையும் 17 வயதுக்குட்பட்டோர் பெண்கள் மேசைப்பந்து அணி இரண்டாவது நிலையையும் பெற்றனர்.

சதுரங்க ஆட்டத்தில் 17, 20 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் அணிகள் இரண்டாவது நிலையையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் என்றும் அவர்களுக்கு உறுதுணையாய் நிற்க்கும் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.
    Detail>>>

வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்!

[19 June 2017 04:32 GMT]
கடந்த 14,15 ,16 ம் திகதிகளில் நடைபெற்ற வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் மிக சிறப்புற தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை நடந்த போட்டிகளில் கரம் விளையாட்டில் மாகாண சம்பியன் பட்டத்தினை தமதாக்கினர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் என்றும் அவர்களுக்கு உறுதுணையாய் நிற்க்கும் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.
    Detail>>>

உயிரியல் ஆய்வுகூட - திறப்பு விழா அழைப்பு

[15 June 2017 07:39 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரியின் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த உயிரியல் ஆய்வுகூடத்தினை 1993 உயர்தர மாணவ மாணவிகள் புனர் நிர்மானம் செய்து நவினமயபடுத்தி எதிர்வரும் ஜுலை 05ம் திகதி புதன் கிழமை காலை 10:30 மணிக்கு மங்களகரமாக திறந்து திறந்து வைக்கவுள்ளனர்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்களும் ,சிறப்பு விருந்தினராக திரு.த.கதிர்காமநாதன் உதவிக் கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்) , யாழ் கல்வி வலயம் அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

அனைத்து பழைய மாணவர்களையும் , ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் அன்புடன் அழைக்கின்றனர் கொக்குவில் இந்துக் கல்லூரி 1993ம் ஆண்டு மாணவர்கள்.     Detail>>>

கண்ணீர்ப்பூக்கள்!!

[06 June 2017 07:25 GMT]
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) முன்னார் தலைவரும் எங்கள் கல்லூரியின் மூத்த இளைப்பாறிய ஆசிரியருமாகிய திருமதி.நித்தியலக்ஸ்மி குணபாலசிங்கம் அவர்கள் நேற்று 05-0602017 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தலையாழி , கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 07/06/2017 காலை 10:00 மணிக்கு நடைபெறும்.     Detail>>>

More News...
வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் சாதனைகள் - கராட்டி!
1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்து வசம் முதலாம், இரண்டாம் இடங்கள்!
வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் சாதனைகள் - மேசைப்பந்து,சதுரங்கம்!
வட மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்!
உயிரியல் ஆய்வுகூட - திறப்பு விழா அழைப்பு
கண்ணீர்ப்பூக்கள்!!
Kajananan has won Silver Medal in ITEX 2017 Malaysia!
கண்ணீர்ப்பூக்கள்!!
கொக்குவில் இந்து 93ம் ஆண்டு மாணவர்களின் மற்றுமொரு செயற்திட்டம்!!
பழைய மாணவர் சங்கம் - அவுஸ்திரேலியா - சிட்னி புதிய நிர்வாக குழு 2017/18.
More news archive >>

பிறந்த நாள் வாழ்த்துகள்
 New Alumni Members
 
Total Members : 1573
Prize day - 2016
 Memorial Volume
 Visitors on 2017-07-26
 
 
    ZZ   22
    AU   04
    CA   02
    US   41
 
 Battle of the Hindus
 Battle of the Hindus
 Battle of the Hindus
 Battle of the Hindus